கடந்த 1 1/2 மாதங்களுக்கு மேலாக உலுக்குளம் செட்டிகுளத்தை இணைக்கும் துடரிக்குளம் வீதியின் குறுக்கே வீழ்ந்து கிடக்கும் பாரிய மரம் இதுவரை அப்புறப்படுத்தப்படாத நிலையில் கிடப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக தினமும் அவ்வீதியால் பயணம் செய்யும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .
செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட இந்த வீதியில் வீழ்ந்து கிடக்கும் மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.