வவுனியாவிற்கு விஜயம் செய்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விருந்தினர்களை குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பிரதான வீதி வழியாக அழைத்து வந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது வவுனியா வர்த்தகர் சங்கம், நகர பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியோரும் முதலமைச்சரை கௌரவித்ததுடன் பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்.
பின்னர் வவுனியா மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் கீழான வவுனியா நகரப் பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்றினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதாரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், பணியாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
-தீபன்-