உலகின் அறிவு கூர்மையின் ஆயுதங்களே ஆசான்கள் : வவுனியா நகர சபை உறுப்பினர் ஆசிரியர் காண்டீபன்!!

1216

உலகத்தின் சகல தொழில்துறைகளையும் நெறிப்படுத்துகின்ற அறிவுகூர்மையின் ஆயுதங்களே அர்ப்பணிப்புள்ள ஆசான்கள். எனவே என் சக தோழமையுள்ள சகல ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கும் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள் என தனது ஆசிரிய தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வளமான ஒழுக்கமுள்ள சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஒவ்வொரு ஆசிரியரும் தமது வாழ்வை உருக்கி பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்காக உலக ஆசிரியர் தினம் ஐப்பசி 05ம் நாள் கொண்டாடப்படுகிறது. எனினும் இலங்கையில் ஐப்பசி 06ம் நாள் கொண்டாடப்படுகிறது.

வவுனியா நகர சபையின் உறுப்பினராக மக்கள் சேவையில் பரிணமித்தாலும், சம காலத்தில் வவுனியா அல் இக்பால் ம.வி ஆசிரியராக கடமையாற்றுவதால் எமது அர்ப்பணிப்பு மிக்க சேவையை நன்கு உணர்ந்தவனாக சமூகத்தில் வாழ்கின்றோம்.

இன்றைய சூழலில் சினிமா கலாசாரமும் அதனுடன் கூடிய போதை விளம்பரங்களும் சமூகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றன, இதன் தாக்கமிகு மாணவர் சமூகத்தில் மரியாதையற்ற போக்கும் நிலவுவதால் பல ஆசிரியர்கள் பல அழுத்தங்களின் மத்தியில் சேவையாற்ற வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.

ஆசிரிய நியமனங்கள் இனிவரும் காலங்களில் ஆசிரியர்களின் மனப்பாங்கை உணர்ந்து வழங்கப்பட்டு, நீண்டகாலமாக குறித்த பகுதியினுள் மாத்திரம் பணியாற்றுபவர்களையும் கருத்தில் கொண்டு சுயாதீன இடமாற்றங்கள் நிகழ நிர்வாக திறமைகள் முயல வேண்டும். ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன உழைச்சல் அந்த பாடசாலை சமூகத்தையும், ஆசிரியரின் குடும்ப சூழலையும் பின்னோக்கி கொண்டு செல்லும்.

இனிவரும் காலங்களில் ஆசிரிய பணி புரியும் உன்னத சமூகத்தின் நிர்வாக ஆளுமையுள்ளவர்கள் ஒவ்வொரு ஆசிரியரதும் நிலைமைகளை உணர்ந்து செயலாற்றினால் தேசத்தின் கல்வி வளர்சியில் சிறிய அதிகரிப்பை காணமுடியும். இந்த ஆண்டிலிருந்து ஆவது ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற சமூகங்கள் முன்வரவேண்டும்.

வட கிழக்கு தாயக பகுதிகளின் பின்தங்கிய பிரதேசங்களில் தமது அர்ப்பணிப்பு மிக்க ஆசிரிய பணியை கடுமையான சிக்கல்களின் மத்தியில் பணியாற்றும் ஒவ்வொரு சக ஆசிரியரும் மகா புருசர்கள் அவர்களுக்கு தலை சாய்ந்த கோடான நன்றிகளுடன் கூடிய பாராட்டுகள்.

சுந்தரலிங்கம் காண்டீபன் (B.Sc)
நகர சபை உறுப்பினர் – வவுனியா
ஆசிரியர் – வ/அல் இக்பால் ம.வி