‘இயல் திறனை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனஸ் மக்சீன் தலைமையில் பெண்களுக்கான கருத்தமர்வு இடம்பெற்றது.
பெண்களின் ஆழுமைத்திறனை கட்டியழுப்புவது தொடர்பாகவும் அவர்களின் திறமைகளை எவ்வாறு வெளிக்கொண்டு வருவதுடன் பெண்கள் சமூகத்தில் ஆற்றிவரும் அரசியல், பொருளாதார பங்களிப்பு மற்றும் நாட்டின் தலைவர்களாக இருந்து தேசத்தை காப்பாற்றிய பெண்களின் தலைமைத்துவ பண்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கபே அமைப்பினரால் பிரத்தியோகமாக தேர்வு செய்யப்பட்ட 30 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கருத்தமர்வில் வளவாளர்களாக வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி கெ.சிதம்பரநாதன், கபே அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெ.விஜயகுமார், சாவகச்சேரி பிரதேச சபையின் உதவி தவிசாளர் எஸ்.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.