வேறு சாதி இளைஞரை நீ எப்படி திருமணம் செய்வாய் : ஊரார் முன்பு தந்தை கொடுத்த கொடூர தண்டனை!!

435

இந்தியாவின் பீகாரில் உள்ள கிராமத்தில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து மணந்த இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜவுளி என்னும் கிராமத்தை சேர்ந்த பெண் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞரைக் காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவந்த நிலையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 30-ஆம் திகதி வீட்டிலிருந்து தப்பிய அப்பெண் தனது காதலரை திருமணம் செய்தார்.

அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தார், பெண்ணை பஞ்சாயத்தில் நிறுத்தினர். ஊர் பெரியவர்கள், அந்தப் பெண் செய்த தவறுக்காக, மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தனர்.

பின்னர் பல மணி நேரத்துக்கு அந்தப் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கினர். பெண்ணின் தந்தை முதலில் அடிக்க, ஊர் மக்கள் ஒவ்வொருவராக அந்தப் பெண்ணைத் தாக்கினர்.

இது குறித்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் பீகார் அரசுத் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

வேறு சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்தது தவறு என்பதாலேயே இந்த தண்டனை கொடுத்தோம் என பஞ்சாயத்து தலைவர்கள் கூறியுள்ளனர்