32 கிலோ எடையுடன் கூடிய வலது காலுடன் வாழும் சோமாலிய பெண் : சாத்தான் பிடித்துள்ளதாக உறவினர்கள் அச்சம்!!

440

legசோமாலிய நாட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு 32 கிலோ எடையில் தனது ஒரு கால்மட்டும் இருப்பதால் அவர் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். அன்றாட நடைமுறை வாழ்க்கை கூட வாழமுடியாமல் கஷ்டப்படும் அவருக்கு அவருடைய உறவினர்கள் யாரும் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன்வரவில்லை.

ஏனெனில் அவர் சாத்தானால் சபிக்கப்பட்டவர் என்று தங்கள் குலவழக்கப்படி அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் அவர் யானைக்கால் நோயால் அவதிப்படுவதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சோமாலிய நாட்டை சேர்ந்த சாடியா அப்டினுர் என்ற 35 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திடீரென தனது வலது கால் பெரிதாக தொடங்கியுள்ளது. அவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை பெறாத காரணத்தால் அவருடைய வலது கால் மட்டும் 32 கிலோ எடையுடன் கூடியதாக விகாரமாக மாறியுள்ளது.

அவருடைய உறவினர்கள் அவர் சாத்தானால் பாதிக்கப்பட்டதாக கூறி அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர்.
இந்த தகவலை இணையதளங்களின் மூலம் கேள்விப்பட்ட ஒரு பிரிட்டன் மருத்துவர் தான் அவருக்கு இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து அவரை குணப்படுத்துவதாக அறிவித்துள்ளார்.

தான் நடத்தும் டிரஸ்ட் ஒன்றின்மூலம் இந்த சிகிச்சையை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். எனவே மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள அந்த பெண் கூடிய விரைவில் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவேன் என தனது குடும்பத்தினர்களிடம் கூறிவருகிறார்.