விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்ட குண்டான மனிதர் பல்வேறு போராட்டங்களுக்கு பின் நாடு திரும்பியுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கெவில் செனாய்ஸ்(22).
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் காரணங்களுக்காக இவரும் இவரது பெற்றோரும் அமெரிக்கா வந்தனர். மேயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெவின் சிகிச்சை முடிந்ததும் தனது பெற்றோருடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்திருந்தனர்.
ஆனால் இவரது உடல் எடை அதிகமாக இருக்கவே விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பம் மேற்கொண்டு செலவு செய்வதற்கு இயலாமல் ரயில் மூலம் நியூயோர்க் சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக பிரான்ஸ் செல்ல முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த 12ம் திகதி கெவின் நியூயோர்க் வந்தார், பின்னர் ஒருவழியாக பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவன விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்.





