தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும் தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்க்போனதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவதில் என்ன பிழை உள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என்றும் வாசுகி கூறினார்.
-BBC தமிழ்-





