கையில் கிடைத்தவற்றை எல்லாம் சாப்பிடும் விசித்திர குழந்தை!!

682

cakeபிரித்தானியாவில் உள்ள ஒரு குழந்தை கையில் கிடைத்தவற்றை எல்லாம் சாப்பிடும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

கீசர் என்ற இந்த குழந்தைக்கு பிரடர் வில்லி சிண்ட்ரோம் நோய் தாக்கியுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தை பிறந்து மூன்றாவது வாரத்திலேயே இந்நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் பிறக்கும் 15 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த நோய் தாக்குகிறது.
பசியெடுக்கும்போது உணவு உண்பதற்குப் பதிலாக அகோர பசி காரணமாக கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் இத்தகைய குழந்தைகள் சாப்பிட்டு விடுகின்றன.

திரைச் சீலைகளையும் சுவரில் பூசப்பட்ட பூச்சுக்களையும் கூட இந்த நோய் பாதித்த குழந்தைகள் சாப்பிடுவர். கடந்த 2011ல் திருமண வரவேற்பில் வைக்கப்பட்டிருந்த மூன்றடுக்கு கேக் முழுவதையும் தன்னுடைய இரண்டு வயது குழந்தை சாப்பிட்டு விட்டதாக பிரெடர் வில்லி சிண்ட்ரோம் தாக்கிய மற்றொரு குழந்தையின் தாய் கூறியுள்ளார்.