கற்பழித்த கயவனை சுட்டுக்கொன்ற 60 வயது பாட்டி!!

529

abuseமத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 60 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற ஒருவனை அந்த பெண் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்சாஸ் நகரில் 60 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். நவம்பர் 14ம் திகதி நள்ளிரவில் ஒரு மர்ம மனிதன் அவருடைய வீட்டின் கதவை தட்டியுள்ளான். கதவை திறந்த பெண், அவர் யார் என்ன ஏது விசாரித்துக்கொண்டிருந்தபோது திடீரென அந்த பெண்ணை தள்ளிக்கொண்டு வந்த மர்ம மனிதன் அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு படுக்கையறைக்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் சாவகாசமாக எழுந்து சமையலறைக்கு சென்று ஏதாவது சாப்பிட உள்ளதா என்று அந்த மர்ம மனிதன் பார்த்துக்கொண்டிருந்த போது பின்னால் துப்பாக்கியுடன் வந்த பெண் அந்த மர்ம மனிதனை சுட்டுக்கொன்றுவிட்டு பொலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் செய்த தீவிர விசாரணையில் அந்த மர்ம மனிதன் பால் ஜே.வில்லியம்ஸ் என்ற பெயரை உடையவன் என்றும் அவன் ஒரு கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு முன்புதான் விடுதலை ஆனவன் என்பதை உறுதி செய்தனர். பொலிஸார் 60 வயது பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.