வடக்கிற்கான புதிய பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பூஜித ஜெயசுந்தர நியமனம்!!

579

noethவட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக தற்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்ககோனினால் இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தபட்டது.