வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று(19.10) அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சென்ற இளைஞர்கள் இருவரை சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 1670 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்நடவடிக்கையின்போது ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையில் சென்ற குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.









