சின்ன கலைவாணர் பட்டத்தை பயன்படுத்தக் கூடாது : நடிகர் சங்கத்தில் விவேக் மீது புகார்!!

279

Vivekகாமெடி நடிகர் விவேக் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார். படங்களில் அவரது பெயருடன் இந்த பட்ட பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மறைந்த காமெடி நடிகர் குல தெய்வம் ராஜ கோபால் மகன் சௌந்திர பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நடிகர் சங்கத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது..

நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை மையமாக வைத்து ரசிகர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1962ல் மதுரையில் நடந்த விழாவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால் என் தந்தை குல தெய்வம் ராஜகோபாலுக்கு சின்ன கலைவாணர் பட்டம் அளிக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தின் மரியாதைக்குரிய பொக்கிஷமாக அந்த பட்டத்தை போற்றி வருகிறோம்.

ஆனால் நடிகர் விவேக்கும் இந்த பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் தந்தை வாங்கியபட்டத்தை காப்பாற்றுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலைக்கு எங்களை தள்ளவேண்டாம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.