இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகளின மூலம் ஈழத்தை உருவாக்க முயற்சி : அமைச்சர் சம்பிக்க ரணவக்க!!

567

Champikaஇந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் இணைந்து தமிழ் ஈழத்தை உருவாக்கலாம் என்று தமிழ் சமூகத்தின் சில தரப்புகள் கருதுகின்றன. யுத்தத்தினால் ஈழத்தை அடைய முடியும் என எண்ணிய புலிகளே தற்போது மேற்கு நாடுகளைக் கொண்டு இதனை அடையலாம் என்று எண்­ணு­கின்­றனர் என்று அமைச்­ச­ர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

இலங்­கையில் யுத்தக் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறு­வதை நாங்கள் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றோம். பிரிட்டன் உள்­ளிட்ட மேற்கு நாடு­களே ஈராக்­கிலும் ஆப்­கா­னிஸ்­தா­னிலும் யுத்தக் குற்­றங்­களில் ஈடு­பட்­டுள்­ளன.

இதே­வேளை இலங்­கையில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்ள வந்த பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் பொது­ந­ல­வாய விதி முறை­மை­களை மீறி சம்­மந்­த­மில்­லாத விடயம் ஒன்றை கூறிச் சென்­றுள்ளார்.

இலங்கை ஜனா­தி­பதி பிரிட்­ட­னுக்கு சென்று வட அயர்­லாந்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உரை­யாற்­றினால் அதனை கமரூன் தலை­மை­யி­லான பிரிட்டன் எவ்­வாறு நோக்­கும் என்று வின­வு­கின்றோம் எனவும் சம்­பிக்க ரண­வக்க குறிப்­பிட்டார்.
இந்த விடயம் குறித்து ரண­வக்க மேலும் குறிப்­பி­டு­கையில்..

இந்த நாட்டில் தமிழ்ப் பிரச்­சி­னையை பிரித்­தா­னி­யாவே உரு­வாக்­கி­யது. அவர்கள் முதன் முத­லாக இந்த நாட்­டுக்குள் வரும்­போது நாட்டில் பிரி­வி­னை­வாத பிரச்­சினை இருக்­க­வில்லை. தமிழ் பிர­புக்­க­ளுக்கு அதிக வரப்­பி­ர­சா­தங்­களை வழங்கி இந்தப் பிரச்­சி­னையை பிரித்­தா­னி­யாவே ஏற்­ப­டுத்­தி­யது.

தற்­போது யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து பிரிட்டன் பேசு­கின்­றது. இலங்­கையில் பிரி்ட்டன் இருந்த காலத்தில் சுதந்­தி­ரத்­துக்­காக போரா­டி­ய­வர்­களை எவ்­வாறு பிரிட்டன் நசுக்­கி­யது என்று எங்­க­ளுக்குத் தெரியும். யுத்தக் குற்­றங்­களை பிரிட்­டனே மேற்­கொண்­டுள்­ளது.

மேலும் இலங்கை வரும் முன்னர் பிரிட்டன் பிர­தமர் புலி ஆத­ரவு புலம்­பெயர் மக்­களின் ஏழு குழுக்­களை சந்­தித்­து­விட்டே இலங்கை வந்தார். இந்தியாவின் தமிழ்நாட்டைக் கொண்டு ஈழத்தை அடையலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். யுத்தத்தினால் அதனை செய்ய முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தற்போது இவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.