வவுனியாவில் கார், முச்சக்கர வண்டி மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

845

வவுனியா தாண்டிக்குளத்தில் காரும் முச்சக்கர வண்டியும் இன்று (22.10) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாண்டிக்குளம் A9 வீதியில் சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த முச்சக்கர வண்டியானது, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.