வவுனியாவில் தனியார் பேருந்து தடம்புரண்டு விபத்து : மூவர் படுகாயம்!!

1200

வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த தனியார் பேருந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று(22.10) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வவுனியா நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மடுகந்தப் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டது.

இதேவேளை, திருத்த வேலைக்காக மடுக்கந்த பகுதிக்குச் சென்று வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மேலும், இதில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.