யாழ். காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பழைய ரயில் பெட்டிகளை பழைய இரும்பு விலைக்கு விற்க அரசாங்கம் தயாராகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பயன்படுத்தப்படாது உள்ள இந்த ரயில் பெட்டிகளை வட மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஒருவருக்கு விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வட மாகாணத்திலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரும் இந்த வியாபாரத்துக்கு உதவியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.





