தனது ஒன்றரை வயதுக் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தைக்கு விளக்கமறியல்!!

565

jailயாழ். அரியாலை, பூம்புகார் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக 14 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீலன் டிலக்ஷன் என்ற ஆண்குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியையும் குழந்தையையும் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான குழந்தை ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சைக்குப் பலனின்றி குழந்தை ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.