மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் காரணம் அல்ல என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதுகுறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில் தோல்விக்கு பனித்துளியே காரணம் பந்துவீச்சாளர்களை குற்றம் சாற்றமுடியாது.
முன்னதாகவே பனிப்பொழிவு ஏற்படும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் பந்துவீச்சாளர்கள் பந்தை பிடித்து நேர்த்தியாக வீச சிரமப்பட்டனர். இது ஆட்டத்தின் ஒரு பகுதியாகும், இதற்கெல்லாம் ஒன்றும் செய்ய இயலாது.
எங்களது பந்துவீச்சில் முதல் 5 ஓவர் வரை தான் பந்து ஸ்விங் ஆனது அதன்பிறகு துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களை எடுப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பகல் ஆட்டமாக நடக்கிறது, இதனால் பனிப்பொழிவு பிரச்சினை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.





