புயலில் சிக்கி பலியான தனது மகன் ஆவியாக வலம் வருகிறான் என பெற்றோர் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20ம் திகதி ஏற்பட்ட புயலில் சிக்கி நிக்கோலஸ் மெக்காபே(7) என்ற சிறுவன் உயிரிழந்தான்.
குறித்த சிறுவனே தற்போது ஆவியாக வலம் வந்து கொண்டிருக்கிறான். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தில் நிக்கோலசின் உருவம் தெரிகிறது.
இதுகுறித்து நிக்கோலசின் தந்தை அந்த உருவம் தன்னுடைய மகன் தான் என்றும் ஆவியாக தங்களோடு வாழ்ந்து வருகிறான் என்றும் தெரிவித்துள்ளார்.





