மனைவியின் ஹேண்ட் பேக்கில் சிகரெட் இருந்ததால் அதிர்ச்சியடைந்த கணவன் அதிரடியாக விவாகரத்து செய்துள்ளார்.
சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள வியாபாரி ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மனைவியின் ஹேண்ட் பேக்கை எடுத்து ஆராய்ந்து பார்த்தார். அதில் சிகரெட் பெட்டிகளை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிய கையோடு விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து மனைவியின் உறவினர் ஒருவர் கூறுகையில் அவரது பையில் சிகரெட் இருந்ததற்காக விவாகரத்து கேட்டுள்ளார். உண்மையில் அந்த பெண்ணின் தரப்பு நியாயத்தை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் சவுதியில் இளம்பெண்கள் மத்தியில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்லூரி செல்லும் பெண்களில் 8 லட்சம் பேர் சிகரெட் பிடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சவுதியில் மொத்தம் 60 லட்சம் பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது அதில் 6 லட்சம் பெண்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.





