உலகெங்கிலும் 50 000 ற்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்குள் ஊடுருவிய NSA!!

496

defense_cryptologicஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) உலகெங்கிலும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி மல்வேர்களை நிறுவியுள்ளது.

இதன் மூலம் பல தகவல்களை இரகசியமாக திரட்டிக்கொள்வதே நோக்கமாக காணப்பட்டது என அமெரிக்காவை கதிகலங்க செய்துள்ள எட்வேர்ட் ஸ்நோடன் புதிய ஆதாரத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த செயற்பாடு தொடர்பான உலக வரைபடத்தினை பவர்பொயின்ட் பிரசன்டேசன் வடிவில் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து NSA சேகரித்து வைத்துள்ளது.

இதனை தற்போது டச்சு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளதுடன் அந்நிறுவனத்தின் கேள்விகளுக்கு அமெரிக்கா அரசு மௌனம் காத்துவருகின்றது.