மஹிந்தவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய மைத்திரி : ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!!

279

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பூரண சுதந்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எந்தவொரு பதவிக்கும் எவரையும் நியமிக்கும் பூரண அதிகாரம் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஐ.தே.கவின் ஆனந்த அலுத்கமகே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மஹிந்த ராஜபக்சவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மஹிந்தவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவருமான துமிந்த திஸாநாயக்க வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.