பாடசாலை அதிபர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியுள்ளார் என்று குறித்த மாணவனின் பெற்றோரால் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் காதில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இவ்விடயம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





