திருமணமான இளம் பெண்ணை காட்டில் வைத்து சீரழித்த ஐவர் கைது!!

637

abuseதிருமணமான 20 வயது இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஐவர் சிறிமாபோதிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – சீரம்பியடி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

குறித்த பெண்ணுடன் ஒருவர் புத்தளம் – பாலாவி பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் பின் அப்பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் ஐவர் ஒன்று சேர்ந்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருனகின்றனர்.