சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப் போகிறேன் : மனம் மாறிய செல்வராகவன்!!

303

selvaragavanசெல்வராகவன் இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் இரண்டாம் உலகம். இவர் இயக்கிய எல்லா படங்களையும்விட இந்த படம்தான் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் பெரும் பொருட்செலவில் படமாக்கியிருந்தார். மற்றபடி இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் குறைந்த பட்ஜெட்டிலேயே உருவானவை.

இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்தைத் தொடர்ந்து சிறு பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது அடுத்ததாக ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கப் போகிறேன். ஆக்ஷன் என்றதும் பெரிய பட்ஜெட் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். சிறு பட்ஜெட்டிலேயே இந்த படத்தை எடுக்கப் போகிறேன் என்றார்.

பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் என முத்திரை குத்தப்பட்டு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படமாகவே எடுப்பர். ஆனால் செல்வராகவன் அதிலிருந்து மாறுபட்டு பெரிய பட்ஜெட்டுக்கு குட்பை சொல்லிவிட்டு சிறு பட்ஜெட்டுக்கு தாவியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.