வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கினால் தினசரி இரண்டுக்கு மேற்பட்ட விபத்துக்கள்!!

311

வவுனியா நகரப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களும் பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக, மாவட்ட செயலகத்திற்கு அருகே, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட்டாக்காலி மாடுகள் நிற்பதனால் தினசரி இரண்டுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

வீதியில் காணப்படும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு நகரசபையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் மக்கள் குறித்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவை பயனளிக்கவில்லை.