குத்தாட்டத்துடன் தமிழுக்கு அறிமுகமாகிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!!

253

sanni1கனடாவைச் சேர்ந்த கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் சில பாலியல் படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இந்தியில் ஜாக்பாட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நம்மூர் நடிகர் பரத்தும் நடிக்கிறார். சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த சன்னி லியோன் தமிழ் படங்களில் நடிக்க ஆசை என கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழில் ஜெய், ஸ்வாதி நடிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னிலியோன் இப்போதுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

வடகறி படத்தை வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த சரவண ராஜன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாநிதி அழகிரியின் மீகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி, திரில்லர் படமாக உருவாகி வருகிறது.