வவுனியா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியதிற்கு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் நிதி உதவி!!(படங்கள்)

1003

முன்னாள் உப நகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபருமான திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஆலோசனையின் பெயரில் கோவில்குள இளைஞர் கழக செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் மோகன், மற்றும் கழக இளைஞர் இணைப்பாளர் காண்டீபன் அவர்கள் ஒழுங்கமைப்பில் வவுனியா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடாக வவுனியா மாவட்ட மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்பு மற்றும் இலவச கருத்தரங்கு பற்றிய செயலமர்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை கோவில்குளத்தில் அமைந்துள்ள திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன் போது மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி வவுனியா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மோகன் அவர்களிடம் எடுத்துக் கூறினர். இதற்கு பதிலளித்த திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து உங்களுக்கு உதவியாகவும் செயல்படுவேன் என்று உறுதியளித்தது மட்டுமல்லாமல் இலவச கருத்தரங்குகள் நடாத்துவதற்கு தேவையான நிதி உதவியினையும் செய்து வவுனியா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை ஊக்குவித்தார்.

12