வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோகம் வழக்கு : மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்!!

492

vavunia_high_courtவவுனியாவில் சிறுவர் இல்லமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படுள்ளார்.

நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக இந்த சந்தேகநபரை வவுனியா நீதவான் இராம கமலன் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்செய்தனர்

இந்த விடயங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், பிக்கு உட்பட இரண்டு சந்தேகநபர்களையும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சிறுவர் இல்லமொன்றின் முகாமையாளரான பிக்கு கடந்த 6 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.