வவுனியாவில் பொதுமக்களின் காணிகளை மீள வழங்கும் இராணுவம்!!

602

vavuniyaவவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உஞ்சாற்கட்டி கிராமத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தபட்ட வயற்காணிகளை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதரர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உஞ்சாற்கட்டி கிராம விவசாயிகள் மேற்படி தமது காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அமைச்சரும் ஏனைய வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான திரு.லிங்கநாதன், திரு.தியாகராசா மற்றும் திரு.இந்திரராஜா ஆகியோருடன் குறிப்பட்ட பிரதேசத்திற்கு சென்றதுடன் அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து காணிகளை காணிச்சொந்தக்காரர்களுக்கு மீள கையளிக்க இராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது.

உஞ்சாற்கட்டி நெடுங்கேணியிலிருந்து பல மைல்தூரத்தில் அமைந்துள்ள ஓர் எல்லைக்கிராமமாகும். 1883 காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இப்பகுதியிலுள்ள இவர்களது பூர்வீக காணிகள் இரானுவத்தால் கையகப்படுத்தப்பட்டு நெற்செய்கைக்காக தயார்படுத்தப்பட்டிருந்ததை விவசாயிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதையடுத்து அமைச்சர் உட்பட ஏனைய மாகாசபை உறுப்பினர்களும் பிரதேச செயலாளரும் விவசாயிகளும் அப்பகுதிக்கு சென்றதுடன் அமைச்சர் அவர்கள் உயர் இரானுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து இராணுவம் பிரதேச செயலாளரால் காணிச்சொந்தக்காரர்களை உறுதிப்படுத்துமிடத்து தாங்கள் காணிகளை விவசாயிகளுக்கு மீள கையளிப்பதாக அமைச்சரிடம் உறுதி வழங்கியுள்ளார்கள். இதனால் அப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.