189 பேரை பலி வாங்கிய விபத்திற்கு விமானியின் அலட்சியமே காரணமா?

375

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் கடலில் வீழ்வதற்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறுகளை நிவர்த்தி செய்துள்ளதாக விமானி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்ட விமானி சுனேஜா, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் அனைத்து ஏற்பாடுகளும் அதிகாரிகள் தரப்பு செய்துள்ளது.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறுகள் சரி செய்யப்பட்டதாகவும், பயணத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் சுனேஜா தெரிவித்ததாக பாலி – நுஸா விமான நிலைய முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு விடுத்தும், விமானி சுனேஜா மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் ஜகார்த்தா நோக்கி விமானத்தை அவர் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி லயன் ஏர் விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் தரையிறங்க கோரிக்கை விடுத்த இன்னொரு விமானத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி மருத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விமான நிலையத்தின் மேலே சில நிமிடங்கள் அந்த விமானத்தை வட்டமிடவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மட்டுமின்றி லயன் ஏர் விமானி சுனேஜா மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இடையே மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் தாம் கேட்டதாகவும் அந்த விமானி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் விளக்கம் தெரிவிக்க லயன் ஏர் நிர்வாகிகள் தற்போது மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நிபுணர்கள் கைப்பற்றியுள்ளதாகவும்,

அது விமானியின் அறையில் இருக்கும் கருவியா அல்லது, மொத்த விமானத்திற்கான கருவியா என்பதில் தெளிவான தகவல் வெளியாகவில்ல.

விமானம் புறப்பட்ட பின்னர் 13 நிமிடங்களில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் முக்கிய ஆதாரங்கள் அந்த கருப்பு பெட்டியில் இருந்து கிடைக்கலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.