மஹிந்த பக்கம் தாவினார் தமிழ் எம்.பி : கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சற்று முன்னர் அமைச்சுப் பதவி!!

573

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சற்று முன்னர் கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.நாவின்ன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.