நாளை வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!!

902

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05.11) விடுமுறை வழங்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும் எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (04.11) அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.