ஹட்டன் நகரத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் அறுவர் பாடசாலைக்கு அருகில் கஞ்சா பக்கட்டுக்களுடன் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பக்கட்டுக்களின் பெறுமதி இதுவரை கணிப்பிடப்படவில்லை. பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தால் ஹட்டன் பொலிஸார் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து குறித்த மாணவர்களை கடுமையாக கண்டித்து விடுதலை செய்துள்ளனர்.