ரோஹித் சர்மாவின் அதிரடியில் மயங்கிய அடிடாஸ்!!

611

Rohitஇந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அடிடாஸ் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ரோஹித் சர்மா(26). மொத்தம் 108 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பின், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் அறிமுகமானார், இப்போட்டியில் 177 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து ரோஹித்தை விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பிரபல அடிடாஸ் நிறுவனம் 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் பின் நடந்த மும்பை டெஸ்டில் இவரது பேட்டில் அடிடாஸ் விளம்பரம் இருந்தது.

அடிடாஸ் நிறுவன இயக்குனர் துஷார் கோகுல்தாஸ் கூறுகையில் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர் ரோஹித் சர்மா. அறிமுக டெஸ்டில் அசத்தல் சதம் அடித்தார் இளம் மற்றும் வளரும் வீரர்களுக்கு நல்ல தூண்டுகோலாக இவர் உள்ளார்.

எங்களது கிரிக்கெட் பொருட்களுக்கு இவர் நல்ல மொடலாக இருந்து உதவுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோஹித் தனது ஹீரோ சச்சின் அடிடாஸ் நிறுவனத்துடன் தான் இணைந்துள்ளார் என்றும் தற்போது நானும் ஒப்பந்தம் ஆனது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.