ஷிகர் தவான் புதிய சாதனை!!

318

shigarஇந்த ஆண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

இதில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 71 ஓட்டங்களும், பாவெல் 70 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 264 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர்.

4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த ரோஹித் சர்மா ராம்பால் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

அவருடன் இணைந்த கோலி 19 ஓட்டங்களில் வெளியேறினார். அதன்பின்னர் ஷிகர் தவானும், யுவராஜ் சிங்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

பந்துகளை பவுண்டரிகளாக விளாசிய ஷிகர் தவான், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5வது சதத்தை பதிவு செய்தார். 73 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை எட்டினார்.

இதன்மூலம் இந்த ஆண்டில் 5 சதங்களை அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். மேலும் குறுகிய காலத்தில் 5 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உபுல் தரங்காவுடன் இணைந்துள்ளார்.