நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு : விஜயதாச ராஜபக்ச!!

1066

நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உண்டு என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகாரமும் இணைந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாத அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடி நிலைமை ஏற்பட்டால், நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

19ஆம் திருத்தச் சட்டத்தின் 33(2) சரத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதனை 33(2) சரத்து தெரிவிக்கின்றது.

பழைய அரசியல் அமைப்பில் இந்த விடயம் இருக்கவில்லை, புதிதாக இணைக்கப்பட்ட 19ஆம் திருத்தச் சட்டத்தில் இந்த விடயம் இணைக்கப்பட்டுள்ளது.

தெளிவான காரணமொன்றின் அடிப்படையில் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

நாடாளுமன்றிற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் தெளிவான முரண்பாட்டு நிலைமை காணப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றைத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளார்.