ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல் கடந்த 10 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிரிட்டனை சேர்ந்த முதியவர்.
பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ்(66) இரண்டு குழந்தைகளின் தந்தை. கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல், ஜங்க் உணவுகள் மற்றும் சொக்லேட் மட்டுமே சாப்பிட்டு வருகிறார்.
இதுகுறித்து இவர் கூறுகையில் ஆரம்ப காலங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்ட போது இதய நோய் ஏற்பட்டது.
சரியான சமயத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால் உயிர் பிழைத்தேன். இதயத் தமனியில் அடைப்பு இருந்ததால் உணவுக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனையை மருத்துவர்கள் கூறினர், புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறினர்.
அதன் பிறகு ஜங்க் புட் எனப்படும் கலோரி மிகுந்த சத்தான நொறுக்குத்தீனிகளை உண்ணும் பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் தொடங்கினேன்.
தற்போது தினமும் 5 பக்கெட் சிகரெட் பிடிக்கிறேன். சொக்லேட், சிப்ஸ், மீன், வறுக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் முட்டை அதிகமாக சாப்பிடுகிறேன். உடற்பயிற்சியாக நடனம் ஆடுவதுடன், தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறேன்.
20 நிமிடங்களுக்கு காற்றில் வேகமாக உதைத்தும், குத்துவது போன்றும் உடற்பயிற்சி செய்கிறேன். இதனால் கழுத்து, கைகள் மற்றும் கால்களுக்கு நல்ல பயிற்சி ஏற்படுவதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.