வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)

861


வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு   கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION வழங்கும் குகதாசன் கோபிதாஸ் இயக்கத்தில் உருவான மாயை குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வில் பிரதமவிருந்தினராக பண்டிதர் வீரசிங்கம்  பிரதீபன் (கலாசார உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா) பிரதம விருந்தினராகவும்  மா.கலைச்செல்வன்(வைத்தியர் வவுனியா பொது வைத்தியசாலை) செ. மதுரகன் (வைத்தியர் வவுனியா பொது வைத்தியசாலை) த.பரத லிங்கம் (நகரசபை உறுப்பினர் வவுனியா) பா. பாலபிரசன்னா(நகரசபை உறுப்பினர் வவுனியா)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்படத்துக்கான  மதிப்பீட்டுரையினை த. சுதன் ஆசிரியர் வழங்கினார்.
மேற்படி நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.