முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் மாலை 6 மணிக்கு பூஜை செய்த ஐயர் கைது!!

485

arrest1முல்லைத்தீவு, குமுளமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.

நவம்பர் 27 மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கோவிலில் விளக்கு ஏற்றச் சென்றதாக குறிப்பிட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் செயற்படுவது சட்டவிரோத செயல் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.

பொலிஸாரின் அறிவித்தலை மீறி செயற்பட்டமையின் காரணமாக இராஜரட்ணம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.