பேய் பிடித்துள்ளது என நிர்வாணமாக ஓடவிட்டு எரிக்கப்படும் பெண்கள்!!

433

fireநாகரிகமான சமுதாயத்திலும் பேய் பிடித்ததாகக் கூறி பெண்களை உயிருடன் எரிக்கும் சம்பவங்கள் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துள்ளன. மிகவும் பின்தங்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களை நிர்வாணமாக ஓட விடுவதும் தண்டிப்பதுமாக உள்ளனர்.

சில பெண்கள் தீ வைத்தும் எரிக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த எவ்வித முயற்சிகளையும் பொலிசார் மேற்கொள்வதில்லை.

இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெண்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைய தடுத்து நிறுத்தும் பணியை அரசு ஊழியர்கள் சிலர் செய்து வருகின்றனர்.

இந்த மாநிலத்தில் 1991 முதல் 2013 வரை 1312 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ராஞ்சி அருகில் உள்ள சிமடேகா மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 10 மாதங்களில் 10 பெண்கள் பேய் பிடித்துள்ளது என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.