நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் : நண்பர்கள் மூலம் வெளிவந்த உண்மை!!

255

குருகொட ஓயாவில் குளித்துக்காண்டிருந்போது நீரில் மூழ்கி காணாமல்போன 17 வயதான மாணவன் தொடர்பில் யாருக்கும் தெரியாத இரகசியம் வெளிவந்துள்ளது.

தோலங்கமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் 12ம் தரத்தில் கல்வி பயிலும் அநுஜ தெவ்ரங்க பிரபாஸ்வர 17 வயதான மாணவன் யாருக்கும் தெரியாத இரகசியத்தை குறித்த மாணவனுடன் குளித்த நண்பர்கள் 7பேர் மரண பரிசோதனையின் போது தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ம் திகதி அநுஜ தெவ்ரங்க பிரபாஸ்வர உட்பட எட்டுப் பேர் புளத்கொஹூப்பிட்டிய பொலிஸ் பிரிவில் மோரோந்தோட்ட கல்ஹெடியான பிரதேசத்தில் குருகோடா ஓயாவில் மின்சக்தி ஆலைக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்தபோது, அநுஜ என்ற மாணவன் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.

குறித்த மாணவனின் சடலம் குறித்த இடத்திலிருந்து 300 மீற்றர் கீழே குருகொட ஓயா- கும்புக்கஸ் இடையே மிதந்து கிடந்த நிலையில் கடந்த 8ம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விரிவான விசாரணைகளை புளத்கொஹூப்பிட்டிய பொலிஸ் ஆரம்பித்தது.

வரகாப்பொல அத்நாவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் தோலங்கமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் 12ம் தரத்தில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் பிறந்த தினம் நவம்பர் 2ம் திகதி என்பதால் அதற்கு நிகழ்வொன்றை நடாத்துவதற்காக முதல் நாள்நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், 6ம் திகதி வீட்டில் வகுப்புக்களுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி கேகலை நகருக்கு வந்துள்ளனர்.

அங்கு மதுபானம் மற்றும் ஏனைய பொருட்களும் வாங்கிக் கொண்டு குறித்த இடத்திற்குச் சென்று மதுபானம் அருந்தி குளித்து விட்டுச்செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு மூன்று மணித்தியாலங்கள் குளித்துக்கொண்டிருந்போது தண்ணீரில் விழுந்த கைத்தொலைபேசியை தேடுவதற்கு ஏனைய நண்பர்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்தவேளை, கல்லின்மேல் உட்கார்ந்திருந்த அநுஜ தெவ்ரங்க நீரில் விழுந்து காணாமல்போயுள்ளார்.

இதனையடுத்து, இரண்டு மணித்தியாலங்கள் வரை அவரைத்தேடிய நண்பர்கள் அநுஜ கிடைக்காத்தால் தமது ஆடைகளை உடுத்திக்கொண்டு வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு நடந்த சம்பவத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை என தீர்மானித்துக்கொண்டு வீட்டிற்கு செல்லஆயத்தமானபோது, நண்பர்கள் ஏழுபேரில் இருவர் மீண்டும் காணாமல்போன நண்பனைத்தேட ஓயாவுக்கு சென்றுள்ளனர். மிகுதி ஐந்து பேரும் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மறுநாள் பாடசலைக்கு சென்ற இரு மாணவர்கள் எதையும் கேட்காமல் இருந்போது ஆசிரியர் விசாரித்துள்ளார். இதன்போது மாணவர்கள் இருவர் குறித்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் பாடசலை அதிபர் உட்பட்ட குழுவினர் உயிரிழந்த மாணவனின் வீட்டுக்குச்சென்று மாணவன் காணாமல்போனமை தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.