வவுனியா பாடசாலை ஆசிரியர்களிடையே குழு மோதல்!!

424

வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் ஆதரவாளர்களும் அதிபருக்கு எதிரான ஆசிரியர்களுக்கிடையே கடந்த பல நாட்களாக முரண்பாடுகள் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரு ஆசிரியை குழுவினரிடையே தலைமுடியைப்பிடித்து சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கடந்த சில தினங்களாக அதிபருக்கு ஆதரவான ஆசிரியர்களுக்கும் அதிபருக்கு எதிராக ஆசிரியர்களும் இரு குழுக்களாகப்பிரிந்து நின்று முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில் நேற்று முந்தினம் திங்கட்கிழமை அதிபரின் அலுவலகத்திற்குள் அதிபருக்கு முன்பாகவே இரு குழுக்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டுள்ளதுடன் ஆசிரியைகள் இருவருக்கிடையே தலைமுடியைப்பிடித்து சண்டையும் இடம்பெற்றுள்ளதை மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் நேற்று முந்தினம் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளரிடம் இது குறித்து முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனக்கு வேறுபாடசாலைக்கு மாற்றம் வழங்குமாறும் கோரியுள்ளார்.

இந்நிலையில் கல்வி வலயத்தின் அசமந்த செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் இடம்பெற்ற தலைமுடிச்சண்டையே பாடசாலையில் இடம்பெற்ற மிகப்பெரிய சண்டையாகும் இதற்கு முன்னரும் இவ்வாறு பாடசாலையின் அதிபருடன் முரண்பாடுகள் சச்சரவுகள் இடம்பெற்று மூன்று ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மேலும் 8 ஆசிரியர்கள் அதிபரின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து குறித்த பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகளே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கின்ற தரக்குறைவான வார்த்தைப்பிரயோகம் மாணவர்களுக்கு முன்பாகவே ஆசிரியர்களை குறைவாக மதிப்பிடுவதுடன் ஆசிரியர்களுக்குரிய மரியாதையுடன் நடந்து கொள்வதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒருசில அதிபர்களின் செயற்பாடுகள் காரணமாக பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகின்றன. வவுனியா நகரிலிருந்து 6கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வசதியற்ற பாடசாலைக்கு இவ்வாறான நடவடிக்கையினால் அபகீர்த்தியும் ஏற்படுகின்றன. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வியடம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனிடம் வினவியபோது, சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆசிரியர்கள் அதிபரின் செயற்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டு வெளியேறிவருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மேலும் நீடித்துச் சென்றால் பாடசாலையினை மூடவேண்டிய நிலை ஏற்படும் ஆசிரியர்களில் ஒருவர் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து நாளைய தினம் (15.11) அதிபர்களுக்கான கூட்டம் ஒன்று கல்விப்பணிமனையில் இடம்பெறவுள்ளது இந்நிலையில் குறித்த அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை இடம்பெற்று அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.