சமந்தாவை எச்சரித்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா!!

276

samanthaநடிகர், நடிகைகள் டுவிட்டரில் தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர். சமந்தாவும் இதுபோல் டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளார். தன்னைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு செய்கிறார். சித்தார்த்தை இவர் காதலிப்பதும் டுவிட்டர் வாயிலாகத்தான் தெரியவந்தது.

தற்போது தெலுங்கில் நடிக்க உள்ள மனம் படத்தில் தனது கரக்டர் என்ன என்பதையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால் இப்படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடிக்கும் நாகார்ஜுனா அதிர்ச்சியானார். படத்தின் ரகசியம் வெளியாகி விட்டதே என கொதிப்பானார்.

சமந்தாவை தொடர்பு கொண்டு கரக்டர் பற்றிய விவரத்தை எப்படி வெளியிடலாம் என்று கேட்டு கண்டித்தாராம். படப்பிடிப்பு முடியும்வரை தனது அனுமதியில்லாமல் படம் சம்பந்தமான எந்த விஷயத்தையும் டுவிட்டரில் வெளியிடக்கூடாது என்று தடை போட்டுள்ளார். இதனால் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்வதை சமந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.