சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தபோது உயிருக்கு பயந்து அலறியடித்து ஓடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுவரையிலும் 11 420 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை லண்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்கள் தங்களது அனுபங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது.
இதற்கு பயந்து அலறியடித்துக் கொண்டு சிறுவர்கள் ஓடினர். இத்தகைய கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





