ஸ்ருதியை தாக்கியவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!!

551

sruthiநடிகை ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம் திகதி மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய குற்றத்திற்காக அசோக் த்ரிமுகே கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான் என் தம்பிக்கு ஸ்பாட் பாய் வேலை கேட்டுத் தான் ஸ்ருதி வீட்டுக்கு சென்றேன். அவரை பயமுறுத்த செல்லவில்லை என்றும் அவர் தான் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்தினார் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அசோக் ஜாமீன் கேட்டு பந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் வெளியே வந்த பிறகு ஸ்ருதியை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.