ரணில், சுமந்திரன் மற்றும் அனுரவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது நாடாளுமன்றம்!!

951

ரணில் – சுமந்திரன்

சபாநாயகர் கரு ஜயசூரிய இரட்டை நாக்குடையவர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றில் நடைபெறும் நாடகத்தில் பங்கேற்க விரும்பாத காரணத்தினால் நாம் அவையை விட்டு வெளியேறி சென்றோம். நாடாளுமன்றம் தற்பொழுது ரணில், சுமந்திரன் மற்றும் அனுர ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டில் பிரதமர் இல்லை, அவைத் தலைவர் இல்லை என கூறும் கரு ஜயசூரிய எவ்வாறு சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் என அழைக்கின்றார். இதன்மூலம் கரு ஜயசூரியவின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகின்றது. இவ்வாறான ஓர் நிலைமையின் கீழ் நாடாளுமன்றில் அமர்ந்திருப்பதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-