பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை ஏறுமதி செய்ததாக சனத் ஜயசூரிய மீது மோசடி குற்றச்சாட்டு!!

589

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கட் வீரர்கள் மோசடியில் ஈடுபட்டதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சனத் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ம் திகதி மும்பையில் இந்திய வருமான புலனாய்வுப் பிரிவின் எதிரில் முன்னிலையாகுமாறு சனத் ஜயசூரிய உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடிக் கணக்கான இந்திய ரூபா பெறுமதியான பாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவை பாவனைக்கு உதாவது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போலியான நிறுவனமொன்றை நிறுவி இவ்வாறு பாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த பாக்கு வகைகளை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்படும் வரியையும் குறித்த நிறுவனம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுவாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பாக்கு வகைகளுக்கு அதன் மொத்த பெறுமதியில் 108 வீதம் அறவீடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையும் சனத் ஜயசூரிய மீது குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்படத்தக்கது. எனினும் குறித்த குற்றச்சாட்டை சனத் ஜயசூரிய நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.