சிரித்துக் கொண்டே செல்பி
கிணறு ஒன்றின்முன் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்துக் கொண்ட இரு உயிர்த்தோழிகள் பின்னர் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 17 வயதான இரு தோழிகள், தங்களுக்கு தெரிந்த ஒரு சிறுவனை அழைத்து தாங்கள் கிணற்றில் குதிக்கப்போவதாகக் கூறி விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த சிறுவன் சென்று அந்த இளம்பெண்களில் ஒருவரின் அண்ணனிடம் அதைக் கூற, அவன் ஓடிச் சென்று பார்ப்பதற்குள் காரியம் கைமீறிப் போய்விட்டது. பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து அந்த இளம்பெண்கள் இருவரின் உயிரற்ற உடல்களைத்தான் மீட்க முடிந்தது.
அந்த இளம்பெண்கள் இருவரும் தங்கள் செல்போன், தங்கள் கொலுசுகள் மற்றும் தங்கள் ஷூக்களை கழற்றி கிணற்றின் கரையில் வைத்து விட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளனர். கிணற்றில் குதிக்கும்முன் அவர்கள் யாரிடம் சட் செய்தார்கள் என்பதை தேடினால் சட் முழுவதும் டெலீட் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதன் காரணம் யாருக்கும் தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்களில் ஒருத்தி தனது ஆண் நண்பரிடம், தான் இன்னொருவரை விரும்புவதாகக் கூறி அவரது உறவை முறித்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளதையடுத்து, அதற்கும் இந்த தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்னும் கோணத்தில் பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.